எங்களைப் பற்றி….

“புதிய தொழிலாளி” மாத இதழ் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தனிச்சுற்று இதழாக செப்.2014 முதல் 2019 வரை வெளிவந்தது. அதன் பிறகு பல்வேறு காரணங்களால் நின்று போனது. பிப்-மார்ச் 2020-ல் கலைப்புவாதிகளால் அமைப்பு சீர்குலைக்கபட்ட காரணத்தினாலும், கொரோனா பெருந்தொற்றை முன்னிட்டு இன்று வரை அமலில் இருக்கும் பலகட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளாலும் இதழை அச்சிட்டு, தொழிலாளர்களிடம் கொண்டு செல்வது சாத்தியம் இல்லாமல் போனது. காவி- கார்ப்பரேட் பாசிசம் தொழிலாளி வர்க்கத்தையும், ஏனைய உழைக்கும் மக்களையும் கார்ப்பரேட் இலாபவெறிக்கு பலியிட்டு வருகின்ற சூழலில் புதிய தொழிலாளி தனது போர்க்குரலை இந்த இணையதளம் மூலம் மீண்டும் ஒலிக்கத்துவங்கியுள்ளது.