மே 1, தொழிலாளர் தினம்! பு.ஜ.தொ.மு. முகநூல் கூட்டம்!

அன்பார்ந்த தொழிலாளர்களே,  உழைக்கும் மக்களே!

மேதினம் என்பது தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளுக்கான போராட்ட நாள் மட்டுமல்ல; எந்தப் பிரிவு உழைக்கும் மக்களாக இருந்தாலும் போராடித்தான் தங்களது உரிமைகளை நிலைநாட்ட முடியும் என்பதை உறுதிப்படுத்திய இன்னுமொரு வரலாற்று பாடமே மேதினம்!

நடப்பு ஆண்டு மேதினத்தை முன்னெப்போதையும்விட முனைப்பாக முன்னெடுக்க வேண்டிய அளவுக்கு உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுள்ளது. ஆனால், 20 இலட்சம் பேர் கலந்து கொள்ளும் கும்பமேளாவை ஆர்.எஸ்.எஸ் துணையோடு அரசு எந்திரம் நடத்தி முடித்திருக்கிறது. இங்கெல்லாம் வராத கொரோனா தொற்று மேதின பேரணியில் மட்டும் மிக வேகமாக பரவிவிடும் என்கிறது அரசு.நடந்து முடிந்திருக்கும் 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே-2 அன்று நடப்பதால், மேதின பேரணியால் சட்டம்-ஒழுங்கு சீர்குலையும் என்கிறது போலீசு.

இந்த நெருக்கடிகளின் விளைவாக நாம் திட்டமிட்டிருந்த மேதின பேரணி-ஆர்ப்பாட்டம் நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, மாற்றுத்திட்டமாக மேநாள் கூட்டத்தை முகநூல்வழி கூட்டமாக நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த முகநூல் கூட்டத்தை பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இங்கணம்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
மாநில ஒருங்கிணைப்புக் குழு, தமிழ்நாடு.

Leave a Reply

Your email address will not be published.