தொழிலாளி வர்க்கத்தின் இணையவழி போர்க்குரல்…!

அன்பார்ந்த தொழிலாள தோழர்களே,

மாபெரும் பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் அவர்களது  151-வது பிறந்தாளில் ( 22, ஏப்ரல் 2021 ) தொழிலாளி வர்க்கத்தின் இணையக்குரலாக “ புதிய தொழிலாளி” என்கிற  இணைய பக்கத்தை அறிமுகம் செய்து, துவக்கி வைப்பதில் உற்சாகம் அடைகிறோம்.

செப்.2014 முதல்  2019- வரை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தனிச்சுற்று இதழாக வெளிவந்த “புதிய தொழிலாளி” மாத இதழ் பல்வேறு காரணங்களால் நின்று போனது. பிப்-மார்ச் 2020-ல் கலைப்புவாதிகளால் அமைப்பு சீர்குலைக்கபட்ட காரணத்தினாலும், கொரோனா பெருந்தொற்றை முன்னிட்டு இன்று வரை அமலில் இருக்கும் பலகட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளாலும் இதழை அச்சிட்டு, தொழிலாளர்களிடம் கொண்டு செல்வது சாத்தியம் இல்லாமல் போனது. காவி- கார்ப்பரேட் பாசிசம் தொழிலாளி வர்க்கத்தையும், ஏனைய உழைக்கும் மக்களையும் கார்ப்பரேட் இலாபவெறிக்கு பலியிட்டு வருகின்ற சூழலில் புதிய தொழிலாளி தனது போர்க்குரலை மீண்டும் ஒலிக்கத்துவங்கியுள்ளது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சீர்குலைவுவாதிகளிடமிருந்து பாதுகாக்க மாநில அளவில் ஒருங்கிணைப்புக்குழு கட்டப்பட்டிருப்பதை 16.4.2021 தேதியிட்ட பத்திரிகை செய்தி மூலமாக அறிவித்திருந்தோம். பு.ஜ.தொ.மு-வின் பொதுச்செயலாளராக இருந்த சுப. தங்கராசுவின் பாட்டாளி வர்க்க விரோதப்போக்குகளால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு செப்.2020-ல் நீக்கப்பட்டார். அவரை கண்காணிக்கத்தவறியதற்காக அன்றைய ஒட்டுமொத்த மாநிலக்குழுவும் நீக்கப்பட்டு , அடுத்துவருகின்ற 4 ஆண்டுகளுக்கு பு.ஜ.தொ.மு-வின் எந்த மட்டத்திலும் பொறுப்புக்கு வர தடை விதிக்கப்பட்டது.

இந்த பின்னணியில், புதிய மாநில நிர்வாகக்குழுவை தேர்வு செய்யும் மாநில மாநாட்டை நடத்த பொறுப்பளிக்கப்பட்ட 3 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவில் இருந்த 2 பேர், திட்டமிட்ட வகையில் மாநிலக்குழுவை தமது தரப்பினர் கைப்பற்றும் வகையில் பல்வேறு தகிடுதத்தங்களை செய்தனர். தேர்தல் குழுவின் பெரும்பான்மை என்கிற பெயரில் எந்த மரபு மீறலையும் செய்யத்துணிந்தனர். இனியும் இதை அனுமதிக்கக்கூடாது என்று களமிறங்கிய மாவட்டக்குழுக்கள், முன்னணியாளர்கள் ஆகியோரைக் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு உருவாக்கப்பட்டது. புரட்சிகர தொழிற்சங்கமான பு.ஜ.தொ.மு.வை சீர்குலைவுவாதிகளிடமிருந்து பாதுகாத்து, குறிப்பிட்ட காலத்துக்குள் புதிய மாநிலத்தலைமை ஒன்றை உருவாக்குவதே ஒருங்கிணைப்புக் குழுவின் முதன்மையான பணி அதனை மேற்கொள்ளவும், தொழிலாளி வர்க்கத்தை வர்க்க உணர்வூட்டி அமைப்பாக்கவும் இந்த இணையக்குரல் முன்னணி பாத்திரமாற்றும் என நம்புகிறோம்.

புரட்சிகர வாழ்த்துக்களுடன்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
மாநில ஒருங்கிணைப்புக்குழு,
தமிழ்நாடு. செல்பேசி : 8056386294

7 comments

Skip to comment form

  • nellaiyappan on April 22, 2021 at 10:25 am
  • Reply

  வர்க்க முரண்பாடே பிரதான முரண்பாடு என்பைதை மக்களிடம் எடுத்துரைப்ோம்!

  • Kuzhal on April 22, 2021 at 10:28 am
  • Reply

  புரட்சிகர வாழ்த்துகள். தொடரட்டும் மக்களின் பனி

  • Saravanan on April 22, 2021 at 11:30 am
  • Reply

  கலைப்பு வாதிகளின் சீரகுலைவை அம்பலப்படுத்தி ,எஃகுறுதியான வர்கக ஒற்றுமையை கட்டியமைப்பதே முதல் முக்கிய பணி என்பதை உறுதியேற்று ஆரம்பிக்கப்பட்டிருக்கும் புதிய தொழிலாளி இணையத்திற்கு எமது திருவள்ளுர்,காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்கள் சார்பில் உளம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

  • தம்மவேல் on April 22, 2021 at 11:58 am
  • Reply

  வாழ்த்துக்கள் தோழர்

   • nellaiyappan on April 22, 2021 at 3:12 pm
   • Reply

   எப்ேதும் இணைந்திருங்கள்.

  • புதுநிலா on April 22, 2021 at 2:04 pm
  • Reply

  தோழர் லெனின் அவர்களின் 151 வது பிறந்த நாளில் உதயமாகும் புதிய தொழிலாளி புரட்சியை வழி நடத்தும் பாட்டாளி வர்க்கத்தின் அமைப்பாளனாகவும் , முன்னணிப் படையாகவும் செயல்பட்டு புரட்சியின் வெற்றிக்கு வழிகாட்டி அழைத்துச் செல்ல வாழ்த்துகிறேன், வேண்டுகிறேன்.வாழ்த்துக்கள்.

  • புதுநிலா on April 22, 2021 at 4:19 pm
  • Reply

  பாட்டாளி வர்க்க ஆசான் புரட்சியாளர் தோழர் லெனின் பிறந்த நாளில் உதயமான புதிய தொழிலாளி அனைத்து பாட்டாளிகளையும் ஒன்றினைக்கும் அமைப்பாளர் ஆகட்டும் .வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published.